ஒருவர் மாவோயிஸ்ட்டாக இருப்பதே ஒரு குற்றமல்ல - கேரள அரசு உயர் நீதிமன்றம்
கேரளத்தில் கேரளத்தில் சியாம் பாலகிருஷ்ணன் என்ற நபரை தண்டர்போல்ட் படையினர் கைது செய்து, அவரது வீட்டை சோதனையிட்டனர். ஆனால் வீட்டிலிருந்து எத்தகைய ஆதாரங்களும் கைப்பற்றப்படவில்லை.
அதைத் தொடர்ந்து சியாம் பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஒற்றை நீதிபதி அமர்வு கேரள போலீஸார் மீது ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து கேரள அரசு உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு முறையீடு செய்தது.
அந்த முறையீட்டை விசாரித்த இரு நபர் அமர்வு, நமது அரசியல் சட்டம் ஒருவர் தனக்குப் பிடித்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பதை அங்கீகரிக்கிறது. "ஒருவர் மாவோயிஸ்ட்டாக இருப்பதே ஒரு குற்றமல்ல" காவல்துறை தனிநபர் சுதந்திரத்தை கணக்கில் கொள்ளவில்லை" ன்று கூறி ஒரு நபர் அமர்வு விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை உறுதி செய்தது.
_________________________________________
_________________________________________
"மாவோயிஸ்டுகள் இந்த சமூக அமைப்பையும் அரசியல் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். எனவே, அவர்கள் இந்த சமூக அமைப்பின் மற்றும் அரசின் எதிரிகள்! அவர்கள் இந்த தேசத்தின் முதன்மை எதிரிகள்! தீவிரவாதிகள்!" என்றெல்லாம் அரசும், ஆளும் வர்க்கத்தின் கையூட்டு பெற்ற ஊடக அறிவுஜீவிகளும் அன்றாடம் முழங்கி வருகின்றனர்.
ஆனால் இந்திய அரசியல் சட்டம் தந்துள்ள ஒரு அடிப்படை உரிமையான, "ஒருவர் தனக்கு விருப்பமான சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளலாம்" என்பதையும், அதேபோல "ஒருவர் மாவோயிஸ்ட் கட்சியில் இருப்பது மட்டுமே குற்றம் அல்ல. குற்றச் செயல்ளை பற்றித்தான் வழக்குப் போட இயலும்" எந்த உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் கிழித்து எறிந்து விட்டு செயல்பட்டு வரும் பாசிச அரசையும் காவல் துறையையும் இவர்கள் யாரும் குற்றம் கூற துணிவதில்லை.
மறுபுறம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேரெதிராக , பிற்போக்கான 'அகண்ட பாரதம்', 'இந்து ராஷ்டிரம்' போன்ற கருத்துக்களை அன்றாடம் பிரச்சாரம் செய்து வரும், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக சிறுபான்மை இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பரப்பி வரும் சங்க்பரிவார் மீது காவல்துறையின் நிழலும் படுவதில்லை என்பது தான் உண்மை.
ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2000 பேரை கொலை செய்தாலும், மசூதிகளில் குண்டு வைத்தாலும், ரயில்களில் குண்டு வைத்தாலும்,அவர்கள் மீது வழக்குப் போடுவதில்லை, தப்பித் தவறி வழக்கைத் போட்டாலும் , யு.ஏ.பி. ஏ. சட்டத்தின் கீழான வழக்கானாலும் அவர்களுக்கு பிணை கிடைத்து விடும். அவர்களது வழக்கும் கூட விடுதலை ஆகி விடும்.
ஆளும் வர்க்கங்கள் புனிதமானது என்று மக்களுக்கு போதிக்கும் அரசியல் சட்டத்தைத் தாமே மதிப்பதில்லை என்பதுதான் உண்மை.
இந்தியாவில் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்ற உண்மையை புரிந்துகொள்ள ஒருவர் மாவோயிஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
Source - மாவோயிஸ் சிறைவாசிகள் விடுதலை குழு
கருத்துரையிடுக