மூடி மறைக்கப்பட்ட சாத்தூர் பறையர் இன தோழர்களின் காவல் மரணம்!

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்திருக்கிறார்கள். இதனை வரவேற்கிறோம்.
இதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நடுச்சூரங்குடி கிராமத்தை சேர்ந்த பறையர் இன தோழர்கள் ஞானசேகர், திலகராஜ் ஆகியோர் கூலிக்கு மணல் அள்ளச் சென்ற ஒரே காரணத்திற்காக கள்ளர் சாதியைச் சேர்ந்த மணல் கொள்ளை தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அய்யனார் (ம) காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கம்பங்கொல்லையில் வீசபட்டார்கள்.
இந்த வழக்கில் விருதுநகர் வச்சக்காரப்பட்டி காவல்துறையானது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யாமல், உடற்கூராய்வு அறிக்கை வருவதற்கு முன்பாகவே மின்வேலியில் விழுந்து இறந்ததாக பொய் வழக்குப்பதிவு செய்து காவல் மரணத்தை மறைத்தது.
அந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நடுச்சூரங்குடியை சேர்ந்த பறையர் இனத்தை சேர்ந்த ஞானசேகர், திலகராஜ் ஆகியோர் சாத்தூர் நடுவப்பட்டி அருகேயுள்ள அர்ச்சுனா நதியில் இதற்கு முன்பாக மணல் அள்ளச் செல்லும்போதெல்லாம் அர்ச்சுனா நதி அருகில் உள்ள தோட்டத்தின் உரிமையாளர் நாயக்கர் சாதியைச் சேர்ந்த கண்ணாயிரம் என்பவர் பள்ளப்பு*டை, பறப்பு*டை எல்லாம் என் தோட்டம் அருகே மணல் அள்ள வராங்க என்று திட்டியதாகவும், அவர்களை கொலை செய்ய வேண்டும் என்கிற கெடு நோக்காட்டு தோட்டத்தை சுற்றி உயர் மின் அழுத்த மின் வேலியை பாய்ச்சி வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.
மேலும், சம்பவம் நடந்த தினத்தன்று மணல் கொள்ளை தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர் அய்யனார் தலைமையிலான போலீசார் அங்கு மணல் ரைடுக்கு வந்ததாகவும், அவரை கண்ட அனைவரும் தப்பித்து ஓடியதாகவும் ஞானசேகர், திலகராஜ் ஆகியோர் மட்டும் கண்ணாயிரம் நாயக்கர் தோட்டத்தில் பாய்ச்சப்பட்டிருந்த உயர் அழுத்த மின் வேளியில் விழுந்து இருந்ததாகவும் வச்சக்காரப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சித்ரகலா பொய் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கில், முதலில் ஞானசேகரும் திலகராஜும் மணல் மூடி இறந்தார்கள் என்றும், பின்னர் மின் வேலியில் விழுந்து இறந்தார்கள் என்றும் காவல்துறை மாற்றி மாற்றி பேசியது. காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் சில தலித் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் துணை போனார்கள் என்பதற்கு கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் மட்டுமே சாட்சி.
அந்த இக்கட்டான வேளையில் தலித் விடுதலை இயக்கம் மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக நின்றது. சம்பவம் நடந்த மறுநாள் இரவு 11.00 மணிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சில தலித் அமைப்புகளின் உதவியோடு வச்சக்காரபட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து, ஞானசேகரும் திலகராஜும் மின்வேலியில் விழுந்து தான் இறந்தார்கள் என்று புகார் மனு கொடுங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 5,00,000/- தருகிறோம் என்று அப்போதிருந்த விருதுநகர் டிஎஸ்பி லட்சுமணன் தலைமையில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது.
அப்போது எனது தலைமையிலான தோழர்கள் காவல்நிலையம் சென்று டிஎஸ்பி லட்சுமணனிடம் பிரச்சனை செய்த பின்பாகவே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனாலும், டிஎஸ்பி லட்சுமணன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்ற ஆட்டோவை சாத்தூர் டோல்கேட்டில் மடக்கி ஆட்டோவில் இருந்த திலகராஜின் அண்ணன் பாஸ்கரனை காவல்நிலையம் அழைத்து வந்து, அவரிடம் உயர் அழுத்த மின் வேலியில் விழுந்து இறந்ததாக புகார் மனு பெற்று தோட்டக்காரர் கண்ணாயிரம் நாயக்கர் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்கு போட்டு காவல் படுகொலையை மூடி மறைத்தார்கள்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மதுரை சமூகநீதி அமைப்பின் மூலமாக உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்பின்பாக, தலித் விடுதலை இயக்கம் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதற்கட்ட தீருவுதவித்தொகை, அரசு வேலை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், சிபிசிஐடி-யின் விசாரணை அறிக்கையில் இந்த வழக்கமானது வன்கொடுமை வழக்கு இல்லை. முதல் தகவல் அறிக்கை தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கு ஊத்தி மூடப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஞானசேகர் திலகராஜ் ஆகியோர் உடலில் அடித்ததற்கான இரத்த காயங்கள் இருந்தது; மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. ஆனாலும், அரசு மருத்துவர்கள் உதற்கூராய்வு அறிக்கையை மாற்றி எழுதினார்கள்.
இறுதியாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியும், நிதியும் மறுக்கப்பட்டது. இப்போது அந்த குடும்பம் யாருடைய ஆதரவும் இன்றி நிற்கதியாய் நிற்கிறது.
ஒரு நாடார் படுகொலை செய்யப்பட்டால் அவர்களுக்காக அனைத்து நாடார் அமைப்புகளும் இணைந்து போராடுகிறார்கள். ஆனால், பட்டியல் சமுகத்தைச் சேர்ந்த ஒருவன் இறந்தால் இங்குள்ள பட்டியல் சமூக அமைப்புகள் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அதுமட்டுமின்றி இங்குள்ள பொதுச் சமூகமும் சாதி பார்த்தே குரல் கொடுக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஏன், ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு நீதிகேட்டு சிபிஎம் விடுதுநகரில் 16 இடங்களில் போராட்டம் நடத்துயது. ஆனால், ஞானசேகர், திலகராஜ் படுகொலைக்கு மட்டும் சிபிஎம்-ன் துணை அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி தான் போராடியது.
இனியாவது இந்த பட்டியல் சமூகம் திருந்த வேண்டும், பட்டியல் சமூகத்தினரின் பிணத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்வதை விடுத்து இன உணர்வோடு போராட முன்வர வேண்டும். பொதுச் சமூகத்தை நம்பி பயனில்லை என்பதையும் உணர வேண்டும்.
நன்றி!
~~~~~
என்றும் பட்டியல் சமூக மக்களின் விடுதலை போராட்டத்தில்,
பீமாராவ் சாக்யா,
தலித் விடுதலை இயக்கம்.
02.07.2020