நாம் எல்லாம் குற்றவாளிகளே - தோழர் பாரதி கண்ணன்
நாம் எல்லாம் குற்றவாளிகளே....
_________________________________
_________________________________
மனசாட்சியே இல்லியா ?
நாங்களாம் மனசுங்களா மாடா?
வேர ஏதாவது வேலைக்கு போகனும்னா கூட முடியமாட்டேங்குதே.....
நாங்களாம் மனசுங்களா மாடா?
வேர ஏதாவது வேலைக்கு போகனும்னா கூட முடியமாட்டேங்குதே.....
என்று இன்று காலை 7 மணிக்கு வேலைக்கு வந்துட்டு உடைந்த குரலில் புலம்பிகிட்டு உட்காந்திருந்த ஜெயா அக்காவை பார்த்தவுடன் என்னால் அந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. சுத்தம் செய்து விட்டு குப்பை சேகரிக்கும் வண்டியை நேற்று மாலை எப்போதும் போல் அதே இடத்தில் விட்டு செல்வது வழக்கம். மறுநாள் காலைக்குள் அந்த வண்டியில் ஏராளமான குப்பைகள் நிறைந்து இருப்பது கூட பிரச்சனையில்லை. வண்டிக்குள் போடமால் பக்கத்திலேயே கீழே பொருப்பில்லாமல் போட்டு சென்றதால் நாயும் மாடும் கடிச்சி குதரி செதரி கிடந்ததுதான் அக்காவுக்கு சொல்லி மாலாத வேதனையை கொடுத்தது.
வலிமிகுந்த வார்தைகளை கேட்டவுடன் எனக்கும் அழுகை பீரிட்டு வர கட்டுபடுத்தி கொண்டேன். இதற்கான உடனடி தீர்வு நிரந்தர தீர்வு என்று எப்படி யோசிக்க முற்பட்டாளும் கோவமும் கையறுநிலையும் மட்டுமே மிஞ்சியது. எதாவது செய்ய வேண்டும் என்று நான் கேட்ட முதிர்ச்சியற்ற கேள்விகளுக்கு பதில் சொன்னாங்க. மற்றவர்களை போல் ஏன் பேட்டரி வண்டி உங்களுக்கு கொடுக்கல என்றதற்கு... வேர வண்டி இல்லைனு சொல்லிட்டாராம் அதிகாரி.
சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் குப்பைகள் போடுவதில் குற்ற உணர்ச்சி இல்லை. எங்கள் வீட்டில் 99% மக்கும் குப்பை வீட்டை விட்டு வெளியே போவதில்லை. 80% மக்காத குப்பைகள் வீட்டிற்கு உள்ளே வருவதற்கு முன்பே தடுக்கப்படுகிறது. அதாவது நுகர்விலேயே தடுக்கப்படுகிறது. 10% மறுசுழற்சிக்கும் 5% முறையான மறு சுழற்சிக்கு வீட்டிலேயே எடுத்து வைக்கப்படுகிறது. 5% வேறு வழிதெரியாமல் வெளியேற்றப்படுகிறது.
திட கழிவு மேலாண்மை சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக வேண்டுமானால் மேலே குறிப்பிட்டது இருக்கும். ஜெயா அக்கா போன்ற என்னற்ற துப்புறவு பணியாளர்களுக்கு வேண்டியது உடனடி நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகள்.
இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் , வேலை மற்றும் சமூக பாதுகாப்பு, சம்பள உயர்வு, கன்னியமாக நடத்துவது, இவர்களுக்கு சென்று சேர வேண்டிய உரிமைகள் மற்றும் பொருளாதார உதவிகள் நிர்வாக மற்றும் அரசியல் குறுக்கீடு இல்லாமல் இவர்களை சென்றுசேர்வதை உறுதிசெய்வது. விழிப்படைந்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அன்பும். இதை நாம் கூட்டாக செயல்பட்டாளே செயல்படுத்த முடியும்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய முடிந்த இவர்களின் வேலையை செய்ய மறுக்கும் நாம் கட்டாய கொத்தடிமை தனதிற்கும் நவீன தீண்டாமைகளுக்கும் காரணமாக இருக்கும் குற்றவாளிகளே.
ஜெய்பீம்
கருத்துரையிடுக