தீதும் ந‌ன்றும்

அந்த‌ ஏழை வியாபாரி ஒவ்வொருநாளும் வியாபார‌ பொருட்க‌ளை த‌ன் க‌ழுதை மீது ஏற்றித்தான் ச‌ந்தைக்கு எடுத்து செல்வார்.
அவ‌ர் வாழும் கிராம‌த்துக்கும் ச‌ந்தைக்கும் இடையே ஒரு சிற்றாறு ஓடிற்று. ஆழ‌ம் குறைந்த‌ ஆனால் கொஞ்ச‌ம் அக‌ல‌மான‌ ஆறு அது. பால‌ம் ஏறி ஆற்றை க‌ட‌க்க‌ ப‌ல‌ மைல்க‌ள் ந‌ட‌க்க‌வேண்டும். அதை த‌விர்க்க‌, ஒவ்வொரு முறை ச‌ந்தைக்கு செல்லும்போதும், த‌ன் க‌ழுதையில் மீது மூட்டைக‌ளை ஏற்றிக்கொண்டு ஆற்றை க‌ட‌ந்து செல்வார் வியாபாரி.
கிராம‌ம் க‌ட‌ற்க‌ரையோர‌ம் இருந்த‌தாலும், அங்கே ஒரு உப்ப‌ள‌ம் இருந்த‌தாலும், பெரும்பாலும் உப்புதான் அவ‌ருடைய‌ வியாபார‌ பொருளாக‌ இருந்த‌து.
ஒருமுறை ஆற்றை க‌ட‌க்கையில் க‌ழுதையின் கால் ச‌ற்று இட‌றி உப்பு மூட்டைக‌ளின் ஒரு ப‌குதி ஆற்று நீரில் ப‌ட்டுவிட்ட‌து. நீரில் மூழ்கிய‌ உப்பு க‌ரைய‌, மூட்டையின் க‌ன‌ம் குறைய‌, க‌ழுதைக்கு பார‌த்தை சும‌ந்து ந‌ட‌ப்ப‌து எளிதாகிப்போன‌து. அன்று வியாபார‌த்தில் அவ‌ருக்கு பெரும் ந‌ட்ட‌ம், க‌ரைந்துபோன‌ உப்பு விர‌ய‌மாகிப்போன‌ விற்ப‌னை ச‌ர‌க்க‌ல்ல‌வா..?
முத‌ல்முறை ந‌ட‌ந்த‌து த‌ற்செய‌லாக‌ ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுதான் என்றாலும் சும‌க்கும் பார‌த்தின் க‌ன‌ம் குறைந்த‌ ம‌கிழ்ச்சியில், தின‌மும் ஆற்றை க‌ட‌க்கையில் வேண்டுமென்றே கால் இட‌றுவ‌துபோல் ந‌டித்து, உப்பு மூட்டைக‌ளின் ஒரு ப‌குதியை பாழாக்கிய‌து க‌ழுதை.
வியாபாரி ப‌ரித‌விப்போடும் ஆற்றாமையோடும் க‌ழுதை
நோக்கி ஒரு பார்வை வீசிய‌ப‌டி க‌ட‌ந்துவிடுவார். வேறென்ன‌ செய்வ‌து வாயில்லா பிராணியாயிற்றே.
ஆனாலும், விரைவிலேயே க‌ழுதையின் த‌ந்திர‌த்தை புரிந்துகொண்ட‌ வியாபாரி அத‌ற்கொரு பாட‌ம் க‌ற்பிக்க‌ நினைத்தார்.
ம‌றுநாள் இருவ‌ரும் பார‌மேற்றும் இட‌த்திற்கு வ‌ந்த‌போது, வ‌ழ‌க்க‌த்தைவிட‌ அதிக‌மான‌ மூட்டைக‌ள் அடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. ஹூம்... "இன்றைக்கு ஓவ‌ர் லோடுதான் போலிருக்கு.." என்று எண்ணிய‌வாறு அருகே சென்ற‌ க‌ழுதைக்கு ஆச்ச‌ரிய‌ம்... மூட்டைக‌ள் பார்க்க‌த்தான் பெரிதாக‌ இருந்த‌ன‌வேயொழிய‌ க‌ன‌மே இல்லை. வ‌ழ‌க்க‌த்தைவிட‌ மிக‌ அதிக‌மான‌ மூட்டைக‌ளை முதுகில் ஏற்றிய‌போதும் பார‌ம் வ‌ழ‌க்க‌த்தைவிட‌ குறைவாக‌வே இருந்த‌து.
கார‌ண‌ம் அன்று வியாபாரி மூட்டையில் க‌ட்டிய‌து ப‌ஞ்சு. வ‌ழ‌க்க‌ம்போல‌ இருவ‌ரும் ச‌ந்தை நோக்கி ந‌ட‌ந்த‌ன‌ர்.
என்ன‌தான் க‌ன‌ம் குறைவாக‌ இருந்தாலும், க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ ப‌ழ‌கிப்போன‌ ச‌ப‌ல‌ம் கார‌ண‌மாக‌ இம்முறையும், ஆற்றை க‌ட‌க்கையில், கால் இட‌றுவ‌துபோல் நடித்து மூட்டைக‌ளின் ஒரு ப‌குதி ஆற்றில் ந‌னையும்ப‌டி செய்த‌து க‌ழுதை.
ப‌ஞ்சு ந‌னைந்தால் என்ன‌வாகும்..? பார‌ம் மிக‌வும் கூடிப்போன‌து. க‌ழுதைக்கு ந‌ட‌ப்ப‌தே பெரும் பாடாய் போயிற்று. ஒருவ‌ழியாக‌ ஆற்றை க‌ட‌ந்து ச‌ந்தைக்கு போய்ச் சேர்ந்து மூட்டைக‌ளை இற‌க்கிய‌ பிற‌குதான் க‌ழுதைக்கு உயிரே மீண்ட‌துபோல் இருந்த‌து.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்
- அதிகார‌ம்: இன்னா செய்யாமை
குற‌ள் எண்: 319
தெரியாமல் நாம் செய்துவிடும் த‌வ‌றுக‌ளே அல்ல‌வை என்றிருக்க‌, தெரிந்தே பிற‌ருக்கு தீங்கு ஏற்ப‌டுத்துவ‌து பெரும் த‌வ‌று. நிச்ச‌ய‌ம் அந்த‌ தீய‌ செய‌லின் எதிர்வினை ந‌ம்மை பாதிப்புக்குள்ளாக்கும்.
ஆனால் இத‌ற்காக‌ ம‌தம், க‌ட‌வுள் என்றெல்லாம் புரியாம‌ல் ந‌ம்பி குழ‌ம்பிக்கொண்டிருக்க‌ தேவையில்லை, இது இய‌ற்கை விதி. இன்னும் சொல்ல‌ப்போனால் இது பெள‌தீக‌த்தில் நியூட்ட‌ன் விள‌க்கிய‌ இய‌க்க‌விதிக‌ளில் மூன்றாவ‌து விதி. ஆங்கில‌த்தில், "every action has an equal and opposite reaction" ப‌ள்ளியில் ப‌டித்திருப்பீர்க‌ள், "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான‌தும் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு"
இது பொருட்க‌ளுக்கும் செய‌ல்க‌ளுக்கும் ம‌ட்டும‌ல்ல‌, எண்ண‌ங்க‌ளுக்கும் சிந்த‌னைக‌ளுக்கும் அழ‌குற‌ பொருந்தும் இய‌ற்கை விதி.
இதையே க‌ணிய‌ன் போங்குன்ற‌னார், "தீதும் ந‌ன்றும் பிற‌ர்தர‌ வாரா" என்று மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்பே எடுத்துரைத்தார்.
ந‌ல்ல‌வை எண்ணுங்க‌ள்
ந‌ல்ல‌வை சொல்லுங்க‌ள்
ந‌ல்ல‌வை செய்யுங்க‌ள்..
வாழ்க்கை வ‌ண்ண‌ம‌ய‌மாகும்..!
தோழ‌மையுட‌ன்,
Fazil Freeman Ali
(மிள் ப‌திவு)