பெண்மை காப்போம்

கும்பிட்டு அழுதேன் 
குரல்வளை நெறித்தான்...
சிறு வயது பாராமல் 
சிதைக்கதானே துடித்தான்...
பிஞ்சு கையை வளைத்து 
பிறப்புறுப்பை தொட்டான்...
கத்திஅழ முனைந்தேன்
வாயைகட்டி வதைத்தான்...
பிஞ்சு உள்ளம் நடுங்கியதை
போதை மனம்கொண்டு ரசித்தான்...
பருவம் பூக்குமுன்னே
மொட்டு என்னை கசக்கினான்...
காமவெறி சண்டாளன்
காமம் தீர்த்துக்கொண்டான்....

உன் உறுப்பு அறுத்த பின்னே
கன்னி திறக்கா பெண்ணா
கட்டையிலே போறேன்டா...

இனியும் தாங்காது 
எங்க உறுப்பு 
புரிஞ்சு நடப்பதே
மானிட பிறப்பு....

பெண்மை காப்போம்
துயர் துடைப்போம்....

அவளின் குரலாய் 


இராசன்