சிபிசிஐடி விசாரணையில் சிக்குகிறாரா? #கடம்பூரார் ..
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி குறித்த விசாரணை செய்து வரும் பிரபல பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான ஒருவர் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இக்கொலை சம்பவத்தின் பின்னனியை மூன்றாம் கோணத்தில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்துள்ளது.
உண்மையில் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை அவர்களது கடையில் இருந்து வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்து வரப்படவில்லை என்பது நியூஸ் 7 வெளியிட்ட சிசிடிவி பதிவுகளின் மூலம் தெளிவாகிறது.
பெனிக்ஸ் காவல் நிலையம் சென்ற சமயம் காவல் நிலையத்தில் கடம்பூராருக்கு நெருக்கமான ஒரு அதிகாரி மற்றும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் மட்டுமே இருந்துள்ளனர். இவர்கள் தாக்கியதாலேயே பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தைக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
பெனிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட காயம் காரணமாக மயக்கமடைந்துள்ளார். அதன் பிறகே கொரோனா பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளருக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆய்வாளர் நிலவரத்தை அறிந்து வர துணை ஆய்வாளரை காவல் நிலையம் அனுப்பி வைக்கிறார். காவல் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டிருந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை ஆய்வாளர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இங்கே தான் திருப்பம்....
பெனிக்ஸை ஏன் எதற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்...?? ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த பதிமூவரில் இருவர் பெனிக்ஸின் நண்பர்கள், நண்பர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி பெனிக்ஸ் பல ஆதரங்களை திரட்டியுள்ளார் அதில் முக்கியமான ஆதாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலின் பொழுது அதிமுகவுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த உதவிகள் மற்றும் அதிமுக பிரமுகர்களுடனான ஸ்டெர்லைட் அதிகாரிகள் நடத்திய உரையாடல்கள். மேலும் தூத்துக்குடியில் கலவரம் நடத்தியவர்கள் குறித்த தகவல்களும் பெனிக்ஸ் மற்றும் அவரது நண்பர்களிடமும் சிக்கியுள்ளது. இத்தகவல்களை பெனிக்ஸிடம் இருப்பது எப்படியாே உள்ளூர் அமைச்சரின் காதுகளுக்கு சென்றுவிட்டது.
தான் வசமாக மாட்டிக்கொண்டோம் என கலக்கம் அடைந்த அமைச்சர் கடம்பூரார் தன் ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தன் சாதிக்கார ஆட்களை வைத்து காவல்நிலைய விவகாரங்களை வேவு பார்த்து காவல்நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல் விவகாரங்களை கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மதியம் பெனிக்ஸின் கடைக்கு சென்று ஆதாரங்களை கேட்டு மிரட்டி பேரம் பேசியுள்ளனர். தங்களுக்கு பணிந்து வராத பெனிக்ஸை அன்றிரவே காவல் நிலையத்தில் வைத்து ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் மூலம் அடித்து கொலை செய்துள்ளனர். தன்னை சித்திரவதை செய்த போதும் கலங்காத பெனிக்ஸை கண்டு ஆத்திரமடைந்த ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் பெனிக்ஸின் தந்தையை தாக்கி கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனிடையே காவல் நிலையம் வந்து பார்த்து அதிர்ந்து போன எஸ்ஐ செய்வதறியாது இன்ஸ்பெக்ட்டரிடம் தகவலை கூற, பயந்து போன இன்ஸ்பெக்ட்டர் மேலதிகாரிகளிடம் கூற, மேலதிகாரிகள் அமைச்சரிடம் கூற, அவர் உத்தரவின் பேரில் கொலை சம்பவத்திற்கு சம்பந்தமேயில்லாத காவல்துறை அதிகாரிகளை பலியாடுகளாக்கி விட்டு பெனிக்ஸ் மரணத்தை மறைக்க முயன்றிருக்கின்றனர்.
இந்நிலையில் போலீஸ் செய்த தவறை மறைப்பதாக நினைத்து இன்னும் சிக்கலை பெரிதாக்கி வருகிறது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெனிக்ஸ் ஜெயராஜ் மற்றும் காவல்துறையினர். ஏனைய அனைவரும் கடம்பூரார் கொடுத்த காசுக்காக கொலை செய்த கூட்டு குற்றவாளிகள்.
எனது நோக்கம் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும், பெனிக்ஸ் சேகரித்த ஆதாரங்களை வைத்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், #ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் எனும் அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும்.
எப்படியும் எல்லா கோணத்திலும் விசாரணை நடக்கும் எனவே இந்த கோணத்திலும் விசாரணை நடந்தாலும்
கடம்பூராரும் அவருடைய சாதியை சேர்ந்த காவல்துறை அதிகாரியும் சிக்குவது உறுதி.
உண்மை தற்காலிகமாக உறங்கும் ஆனால் கண்டிப்பாக சாகாது.
- ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் குழு.
கருத்துரையிடுக