EIA 2020 என்றால் என்னவென பார்ப்போம்.
2
EIA 2020 என்றால் என்னவென பார்ப்போம்.
ஒரு தொழிற்சாலையோ நிறுவனமோ அமைப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்பார்கள். சுற்றுப்புற சூழல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் . இப்பொழுது மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமில்லை. சுற்றுசூழல் துறையிடம் அனுமதி கேட்க அவசியமில்லை. ஒரு வரைவு குழு அமைத்து இருக்கிறார்களாம். அந்த குழுவிடம் அனுமதி வாங்கவும் செய்யலாம். வாங்காமலும் ஆரம்பிக்கலாம் அப்புறம் எதற்கு அந்த குழு.
சதுப்பு நிலங்களை மண் கொண்டு மூடுவதற்கு அனுமதி தேவையில்லையாம். புல்வெளிகளை தரிசு நிலங்களாக கணக்கில் கொண்டு அவற்றில் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம். விவசாய நிலங்களாக இருந்தாலும் புல்வெளி என கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா.
அதை விட முக்கியமான விசயம், அந்த ஆலையினால் எந்த ஒரு பாதிப்பா இருந்தாலும் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், அந்த பகுதி அரசு ஊழியர்தான் புகார் கொடுக்க முடியுமாம். மற்றவர்கள் தலையிட முடியாதாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக்கூட முடியாதாம்.
நாங்கள் என்ன செய்தாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என சொல்லாமல் சொல்லுகிறது இந்த திருத்தம். நீர் நிலைகளும், வயல் வெளிகளும், மலைகளும், காடுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் நாசமாக்கப்படும்.
கொரானா அச்சத்தில் மக்கள் இருக்க இந்த மக்கள் விரோத சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வருகிறது. இயற்கையை இறைவனாக வழிபட்ட பூமியில் இயற்கையை நாசமாக்க முயற்சி நடக்கிறது. குடிக்க நீர் இல்லாமல் அலையும் காலம் தற்பொழுது. சுவாசிக்க காற்று இல்லாமல் ஆக்ஸிசன் பை வருங்காலத்தில் வரும்.
#TNRejectsEIA2020
#WithdrawEIA2020
#ScrapEIA2020
- அரசியல் மாணவர்கள் குழு