இன்று Friends Of Police பெயரில் தமிழ்நாட்டின் காவல்துறையில் ஊடுருவியிருக்கும் "சேவா பாரதி" என்ற அமைப்பினர் யார்?
சேவா பாரதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிப்புகளில் ஈடுபட்டதற்காகவும்,
கிறித்தவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதற்காகவும் தடை செய்யப்பட்டிருந்த ஒரு தீவிரவாத கும்பலாகும். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்த ஆவணங்களை 2003ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வர் வெளிப்படையாகவே வெளியிட்டு பேசினார்.
கிறித்தவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதற்காகவும் தடை செய்யப்பட்டிருந்த ஒரு தீவிரவாத கும்பலாகும். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்த ஆவணங்களை 2003ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வர் வெளிப்படையாகவே வெளியிட்டு பேசினார்.
மேலும் 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், 1999ல் ஒரிசாவில் ஏற்பட்ட புயலின் போதும், நிவாரண சேவைகள் செய்வதாக சொல்லி களமிறங்கி மக்களிடமும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து அவற்றை RSS தீவிரவாத அமைப்பினை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தியது.சேவா இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் வாயிலாக 20மில்லியன் பவுண்ட் பணம் வெளிநாடுகளில் வசூலிக்கப்பட்டது. வசூலித்ததில் நான்கில் ஒரு பங்கு பணம் RSS நடத்திய மதவாத பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. அப்பள்ளிகளில் கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பாடத்திட்டங்கள் நேரடியாக வைக்கப்பட்டிருந்தன.RSS பள்ளிகளின் பாடத்திட்டங்கள் மதவாதத்தன்மையுடன் இருப்பதாக NCERT குற்றம் சாட்டியது. இதனை அப்போதைய Frontline இதழ் அம்பலப்படுத்தியது. இன்று Friends of Police என்ற பெயரைப் பயன்படுத்தி இந்த சேவாபாரதி கும்பல் காவல்துறையில் ஊடுருவி மக்களை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. RSS வன்முறை கும்பலிடமிருந்து காவல்துறையை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். சேவாபாரதி அமைப்பும், Friends of Police என்ற நடைமுறையும் தடை செய்யப்பட வேண்டும்.
கருத்துரையிடுக