ஆசிரியர்களின் வலி


( அரசு பள்ளி பெ.க.ஆ & தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான )

அ முதல் ஃ வரை வாய் வலிக்க கத்தினோம்,
அறிவின் புதினங்களை அள்ளி வந்து
அற்புதமாக அறிந்து கொள்ள செய்தோம்,
கரும்பலகையை காதலித்தோம்,
சுண்ணாம்பு தூளை சுவாசித்தோம்,
கல்லையும் கடவுளாக்கினோம்,
கற்றுகொடுத்து கற்றுகொடுத்து
காற்றையும் இழந்தோம்,
கற்று கொடுத்தற்காக கத்தி குத்தும் வாங்கினோம்,
கடைசி பெஞ்ச் மாணவனையும்
கலையழகு சிற்பமாக்கினோம்,
மண்ணையும் பொன்னாக்கினோம், மனிதத்தை மார்க்கமாக விதைத்தோம்,
விதையை விருட்சமாக்கினோம்,
ஊன்றிய விதைகளெல்லாம் முப்போகமாய் மாற்றினோம்.
வகுப்பறை தேர்வு மட்டுமல்லாமல்,
வாழ்கை தேர்விலும் வெற்றிபெற செய்தோம்.
அறப்பணியை அர்பணிப்போடு செய்தோம்,
அறியாமையை கொளுத்தி புரிதலை புகட்டினோம்,
அறிவு தூண்டுகோல்களான நாங்கள்
இன்று
அடைபட்ட சிறகுகளாய்
அடுத்த வேளை சோறிள்ளாமல்
அறைகுள்ளே கிடக்குறோம்,
அறிவுப் பெருவெளியில் தட்டுத் தடுமாறி,
அன்னமாகவும், சிறுத்தையாகவும் ஓட வேண்டிய நாங்கள் இன்று கூண்டில் அடைபட்ட விலங்குககளாய் சஞ்சலத்துடன் கிடக்கிறோம்.

அவர்களுள் ஒருவன்

ராஜேஷ் ராஜேந்திரன்