தோழர் தமிழரசனை நான் ஏன் பின் தொடர்கின்றேன் - தோழர் எழிலன்.

#தோழர்_தமிழரசனை நான் ஏன்
பின் தொடர்கின்றேன்!
யூத இனத்தின்னுள் சமய சீர்த்திருத்த கொள்கை தெளிவும்,உறுதியும் , அர்ப்பணிப்பும், தியாகமும், செய்யும் வீரமிக்க தோழனாக இருந்தால் "முள்கீடம் தலையில் அணிந்தும் சிலுவை தோலில் சுமந்து அதன்மிதே உயிர் துறந்தார் #இயேசு.
அவரை பின்பற்றவும் தொழுவவும் ஒரு கூட்டம்.
தென் பிரான்ஸில் இருந்த ‘ஆர்லேன்ஸ்’ என்ற முக்கிய நகரை மீட்க, பிரெஞ்சுப் படையைத் தன் தலைமையில் அனுப்புமாறு வேண்டினாள் #ஜோன். மன்னர் தயக்கத்தோடு அவளது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்,. போர்வீரனைப்போல கவசம் அணிந்து, கையில் உருவிய கத்தியுடன், குதிரையின் மீதேறி, ஐந்தாயிரம் போர்வீரர்களுடன் புறப்பட்டாள் ஜோன். . அப்போது அவளது வயது பதினெட்டு,
கடும் போருக்குப் பின் ஜோன் ஆர்லேன்ஸ் நகரைக் கைப்பற்றினாள். அவளின் இந்த வீரச் செயலைப் பார்த்து, இவள் தெய்வீக சக்தி கொண்டவள் என்று மக்கள் கொண்டாடினார்கள்
வீரமங்கையாகத் திகழ்ந்த #ஜோன் வஞ்சகத்தால் பிடிக்கபட்டு மதசபையின் நீதிவிசாரணைக்கு உள்ளானாள், உயிரோடு தீ வைத்து எரிக்கும்படியாக அவளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இன்றுவரையும் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மதங்கள் மட்டுமே ஆட்சி செய்த காலங்களும் உண்டு. அங்கே அறிவியலுக்கும் உண்மைக்கும் இடம் இல்லை. பூமி உருண்டையானது, பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருகிறது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்தமைக்காக கடுமையான சித்ரவதைகளுடன் எரித்துக்கொள்ளப்பட்டார் #ஜியார்டானோ_புருனோ
அவரின் வரலாறு இன்றளவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
#தோழர்_தமிழரசன் வரலாற்றில் உருவான புராணமோ இதிகாசமோ இல்ல நிகழ்காலத்தில் நம் கண்முன்னே ஏற்படுத்திய மாபெரும் சகாப்தம்.
தேசிய இன விடுதலை என்றாலும் உழைக்கும் மக்கள் ஓரணியாக திரளுவதற்கு சாதி ஒரு பெரும் பிளவுவை ஏற்படும் என்பதால் .
" சாதி ஒழிப்பு தேவை தமிழ்நாடு விடுதலை "
மீன்சுருட்டில் மாநாடு நடத்தி
புரட்சியாக முழங்கினார்.
அடிமைக்கு அடிமை உதவயியலாது என்று மழுப்பாமல்.
அடிமைக்கு அடிமை உதவ வேண்டும் என்றால் முதலில் ஒரு அடிமை விடுதலை பெறவேண்டும் என்று நில்லாமல்
பெண்ணாடத்தில் 05,06/05/1984 " தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு .
இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடு " அன்று நடத்திய மாநாடு பல்வேறு போலி சித்தாந்தங்களை முகத்திரையை கிழித்தார்.
அத்தோடு நில்லாமல்!
தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர்.
அவற்றுள் தமிழ்நாடு விடுதலைக்கழகம், விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், தமிழ்த்தேசிய பெண்கள் விடுதலை இயக்கம், உரிமை கோருவோர் ஒருங்கமைப்பு, தமிழ்நாடு இளைஞர் பேரவை.
இதற்கான பொருளாதார சிக்கலை தீர்க்கவே வங்கி கொள்ளையில் ஈடுபட்டார்கள்.
அரசு வங்கியில் பணம் எடுத்தால் அரசே திருப்பி கொடுத்துவிடும் உழைக்கும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கருதினார்.
1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாரண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து கல்லாலே அடித்துக் கொன்றனர்.
கையில் ஏ.கே.47 துப்பாக்கி, கை ஏறிக் குண்டு வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் உடன் இருந்த தோழர்களும் இறந்தனர்.
எங்களுக்கான விடுதலையை
நிர்ணயித்தார்கள்.
எங்களுக்கான
வரலாற்றை உருவாக்கினார்கள்.
எங்களுக்கான
உலக பூபந்தில்
உலகம் அமைய கனவு கண்டார்கள்.
இவர்களை மறந்து வாழ்வதும் நாங்கள் இறப்பதற்கு சமமாக கருதுகிறேன்.
தோழர் எழிலன்.