செத்து ஒழியட்டும் சாதியும் மதமுமம் - ஜேசுதாஸ்

செத்து ஒழியட்டும் சாதியும் மதமுமம்..
------------------------------------------------
பால்ய வயதில் நன்றாக நினைவில் நிற்கிறது.
மார்கழி திங்களில் பனி படரும்
காலை பொழுதில்.
சுகமான நித்திரைக்கிடைய
SPB காதில் வந்து பாடுவார்
புல்லாங்குழல் கொடுத்த முங்கில்களே.
திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதனை அழைப்பார்
இந்து பாடலாக நாங்கள் பார்க்கவில்லை.
எங்கள் தெருவின் கோயிலாகதான்
மாரியம்மன் கோயிலை பார்த்தோம்.
கிருத்துவர்கள் என்று அவர்களும்
எங்களை ஒதுக்கவில்லை
தெருவாசியாகதான் கண்டார்கள் பார்த்தார்கள்.
நாங்கள் ஒன்றாகதான் இருந்தோம்.
புல்லா (அல்லா) கோயிலின்
ஒதுதல் எங்களுக்கு கடிகாரமாக
மாறியிருந்து.
எந்தவொரு நோய்க்கு கவலைக்கு ரஹிம் பாய்தான்
பாடம் போடுவார்.
சலீம் பாய் உபயத்தில் வினாகயர் சதுர்த்தி அன்று
வினாயகர் சிலையாக நிற்பார்.
மார்கழி திறப்பும்
இயேசு சாமி பொறந்த நாளும்
ஒன்றாகதான் இருந்தது.
சாதியும் மதமும் முகவரியில்லாமல்
எங்களுக்கு தெருதான் அனைவருக்கும் முகவரியாக இருந்தது.
அத்தனை இனிமையாக கடந்தது.
பிள்ளைகளுக்கு மதம் சாதியும்
தெரியவில்லை.
சுகமாகத்தான் இருந்தது
ஓர் தாயின் பிள்ளைகளாக.
பண்டிகைகளை பொதுவில்
வைத்தோம்.
மாரியம்மமன் கூழை ராசக் பாய்தான் முதலில் உற்றுவார்.
இயேசு சாமி பொறந்த நாளை
முனியப்பன் சொந்தம் கொண்டாடி கேக் ஊட்டுவார்.
நன்றாகதான் இருந்தது.
எங்க தெருவும் நாங்களும் நல்லாதானே இருந்தோம்.
நல்ல இருந்த தெருவில்.
சில பேர் ஊருக்கு புதுசா வந்தார்கள்.
வித்தியாசங்கள் தென்பட்டது.
காவி கலரில் புதுசா கொடி வந்தது.
நாங்கள்
ராமரின் பிள்ளைகள் என்று மல்லுக்கு நின்றார்கள்.
சலிம் பாய் பார்த்து துலுக்கன்
என்றார்கள்.
நீ தள்ளி நில் என்றார்கள்.
அடுத்து வீட்டு அந்தோணியை பார்த்து பாவடை என்றார்கள்.
நீ கைக்கூலி என்றார்கள்.
மாட்டு கறி தின்பவனோடு
சேராதே.
தள்ளி நில்
நாம் ராமரின் பிள்ளைகள்
என்றார்கள்
எல்லாமே திடீரென
மாறியது.
புல்லா கோயில் இங்கே கூடாது.
கச்சை கட்டினார்கள்
காவிக்கொடியோடு வந்தவர்கள்.
நேற்று வரை
தோளோடு நின்ற ரஹிம்
தள்ளி விட்டோம்.
சண்டையில் ரத்தமும் வந்தது.
அவர்கள் கையில் பச்சை கொடியும் பகையும்
வந்து சேர்ந்தது.
புல்லாக்குழல் கொடுத்த முக்கில்களை நாங்களும்
நிறுத்த சொன்னோம்.
திருச்செந்தூர் கடலோர முருகனை திட்டினோம்.
பெத்லேகத்தில் பிறந்தவரை
இங்கு பிறக்கவே கூடாது என்றோம்.
பள்ளிவாசல் சத்தம்
எரிச்சலை கொடுத்தது.
வேறு இடத்தில் போக செல்ல
தினமும் சண்டைதான்
நேற்று வரை தோளோடு தோளக நின்றவர்கள்.
எதிரியாக மாறி நின்றோம்.
பிள்ளைகளும் தனி தனியாக
பிரிந்தார்கள்
எந்த நேரத்தில் மோதிக்கொள்ளும்
மனித மிருகமாக மாறிப்போயிருந்தோம்
ரத்த்ததை சுவைக்க ஓநாய்கள்
காத்துகிடந்தது.
காவிகொடியும் பச்சைகொடியும்
எல்லைகளை தீர்மானித்து
எந்த ரஹிம் பாய் வினாயகர் சிலையை வாங்கி தந்தாரே.
அவரே சண்டைக்கும் வந்தார்.
வினாயகர் பண்டிகை
சண்டையில் முடிந்து.
ஆஸ்பத்திரியில் கிடந்தோம்
.மனிதநேயம் மறந்துபோனது.
ஏனிந்த ரத்தம். சண்டைகள்
சில ஆண்டுகளில் ஏற்ப்பட்ட
மாற்றம்
மனித மனங்களை
மாற்றியது யார்
மாறிபோனது எதனால்.
மீண்டும் ஓலிக்குமா
திருச்செந்தூர் கடலோரத்தில்
செந்தில் நாதன்.
மார்கழி திங்களில் பெத்லேகத்தில் பிறந்தவர்.
காவியும் பச்சையும்
எங்களை கூறு போட்டது விட்டதோ.
மரித்து போகட்டும் சாதியும் மதமும்.
அதன் கொடிகளும்.
சில ஓநாய் கூட்டமும்.
ஜேசுதாஸ் தர்மபுரி