அமீத்ஷா மீது பதாகை வீசிய முதியவர் துரைராஜை கொலை செய்யத்துடிக்கும் பா.ஜ.க கும்பல்!
அமீத்ஷா மீது பதாகை வீசிய முதியவர் துரைராஜை கொலை செய்யத்துடிக்கும் பா.ஜ.க கும்பல்!
துணைப்போகும் அடிமை எடப்பாடி அரசு!!
வேடிக்கை பார்க்கும் எதிர்கட்சிகள்!!
"அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் பதாகையை வீச முயற்சி செய்தேன். ஏற்கனவே 15 லட்சம் தருவதாக மோடி ஏமாற்றியுள்ளார். நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவனில்லை.
கைது செய்த காவலர்களே என்னை பிணையில் விடுவித்துவிட்டனர்.
ஆனால், தற்போது நான் தங்கியுள்ள வீட்டைச்சுற்றி பா.ஜ.கவினர் உள்ளனர்.
நேற்று அவர்கள் என்னைக் கடுமையாக தாக்கியதில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.
மருத்துவமனைக்குச் செல்லக்கூட
அவர்கள் அனுமதி தர மறுக்கின்றனர்.
என்னை வீட்டுக்காவலில் வைத்தே கொன்றுவிட அவர்கள் முடிவு செய்து விட்டனர்!!"
- முதியவர் துரைராஜ்
# தலைவர்கள் வருகையின்போது
எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு சாதாரண செய்தி. பல நாடுகளில்
செருப்புகளை வீசுவது வழக்கம்.
இந்த முதியவர் வீசிய பதாகை
அமித்ஷா மீதே விழவில்லை.
அமித்ஷா ஒரு நேர்மைமிக்க தலைவராக இருந்திருந்தால், அந்த முதியவரை பா.ஜ.க ரவுடிகள் தாக்கியதை அனுமதித்தே இருக்க மாட்டார்.
ஆனால், அவர் ஒரு குரூர மனம்படைத்தவர் என்பதை குஜராத் கலவரத்தின்போதும், சி.ஐ.ஏ. எதிர்ப்புப்போராட்டத்தின்போதும்,
சிதம்பரம் கைதின் போதும்
இந்த நாட்டு மக்கள் அறிந்தவர்கள்.
இந்த சம்பவம் நடைபெறக் காரணமே அமித்ஷாதான். அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்று இருந்தால் இப்படி நடந்தே இருக்காது.
தமிழக மக்களின் #GoBackAmitShah
எதிர்ப்புப் பிரச்சாரம் இந்திய அளவில்
முதல் நிலையைத் தொட்டது.
அமீத்ஷாவுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இது நன்குத்தெரியும்.
அமித்ஷா வேண்டுமென்றே
சாலையில் நடந்தார். இதைவிடப் பெரிய சம்பவம் நடைபெற வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
சிக்கியதோ ஒரு முதியவர். அவரை தற்போதுவரை பா.ஜ.கவினர் வீட்டுக்காவலில் வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தப்பித்தவறி தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் நாம் அனைவரும் வீட்டுக்காவலில் அடைக்கப்படுவது உறுதி.
எதிர்கட்சிகள், நீதிமன்றங்கள் மற்றும் மனித உரிமை இயக்கங்கள் என்னக்கிழித்துக்கொண்டு இருக்கின்றன?
ஜனநாயக முறைப்படி தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவரை அடித்து உதைப்பதற்கும்,, வீட்டுக்காவலில் வைத்து சித்திரவதை செய்வதற்கும் யார் அனுமதி வழங்கியது? அடிமை எடப்பாடி அரசு சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் இதுதானா?
அந்த முதியவர் தவறு செய்திருந்தால் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கக்கூட அனுமதி தராமல் வீட்டுக்காவலில் வைத்து சித்திரவதை செய்வது ஹிட்லர் ஆட்சியின் உச்சம்.
எதிர்கட்சிகள் உடனடியாக சென்னை நங்கநல்லூரில் உள்ள முதியவர் துரைராஜ் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
அமீத்ஷா மீது பதாகை வீசிய முதியவர் துரைராஜை கொலை செய்யத்துடிக்கும் பா.ஜ.க கும்பல்! துணைப்போகும் அடிமை எடப்பாடி...
Posted by ஃபாரூக் முகமது on Sunday, 22 November 2020
கருத்துரையிடுக