Marudhamuthu Radhakrishnan அய்யாவின் படு பயங்கர எச்சரிக்கை. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!!!!!!!
நெஞ்சைப் பதறவைக்கும் பிரச்சாரம் இஸ்லாமியர்க்கு எதிராக இந்தியா முழுதும் நடந்து வருகிறது.
தற்போது தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் தேர்தல் களத்திலும் இதன் வீச்சு உள்ளது.
தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் சொல்கிறார்:
"மாநிலக்கட்சி முதல்வர் சந்திரசேகர ராவ் ஓர் உண்மையான இந்து அல்ல!"
(28 Nov 2020-தி நியூஸ்மினிட்.காம் நேற்றைய செய்தி)
(தமிழகத்தில் திமுக தலைவர் உண்மையான இந்து அல்ல, அவரது கட்சியினரும், கூட்டணியினரும்கூட
உண்மையான இந்துக்கள் அல்ல)
அடுத்து அந்த பாஜக மாநிலத் தலைவர் அதற்குமேலும் செல்கிறார்; " முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு இஸ்லாமிய பயங்கர வாதிகளிடம் தொடர்பு உள்ளது."
இன்னொரு பாஜக எம்பியான தர்மாபுரி அரவிந்த் கூறுகிறார்:
"இஸ்லாமியக் கட்சியான எம்ஐஎம் கட்சியின் தலைவர் ஒவைசியையும், அவரது சகோதர்கள் இருவரையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் செருப்புக்காலின் கீழ்ப்போட்டு
நசுக்குவோம்!"
Nizamabad MP Dharmapuri Arvind had said that he will crush Owaisi brothers under his shoes once BJP forms the government.
பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் மேலும் கக்கியுள்ள நஞ்சு:
"எங்கள் கட்சி வென்று மேயர் பதவியில் அமர்ந்தவுடன் ஒவைசி கட்சியின் கோட்டையான பழைய ஹைதராபாத் (பாத்த பஸ்தி) மீது மின்னல் தாக்குதல் தொடுப்போம்."
அத்தோடு நிறுத்தவில்லை அந்த மாநில பாஜகவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்:
" நாங்கள் வென்றவுடன் ஹைதராபாத்தில் புகுந்துள்ள அசுத்தமான பாகிஸ்தான் வாரிசுகளையும், (வந்தேறிகளான) ரோஹிஞ்சா முஸ்லிம்களையும் காலால் உதைத்து வெளியேற்றுவோம்!!!"
நம்ப முடியவில்லை அல்லவா? இதுதான் தமிழகத்தின் வருங்காலமும்---நாம் ஏமாந்தால்.
ஏற்கனவே இங்கே வந்தேறிகள் பற்றிய வெறிப்பேச்சு
தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் வழக்கத்திற்கு வந்துவிட்டது.
அந்த மனநிலையைப் பயன்படுத்தி அதை இந்து மதவெறிக்கும் பயன்படுத்த முடியும்.
அறிவையும், அறத்தையும் இழந்தவன் எந்தக் கொடிய வெறியரசியலுக்கும் அடிமையாவான்.
தமிழர் வெறி என்ன, இந்து வெறி என்ன? வெறி வெறிதான்.
ஹைதராபாதில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தார்கள்?
பர்மாவில் (மயன்மாரில்) இனக்கொலைக்கு ஆளாகித் தப்பி வந்த அநாதை மக்கள் இவர்கள். (ஈழத் தமிழர் போல)
முஸ்லிம்களான இவர்களைத் தான் வந்தேறிகள் என்று வசை பாடி மீண்டும் பர்மா அரசின் கொடிய கரங்களில் ஒப்படைக்கத் துடிக்கிறது பாஜக அரசு.
இது குறித்து சட்டமெல்லாம் இயற்றியுள்ளதை நாம்
அறிவோம்.
பல்வேறு முகாம்களில் குழந்தை குட்டிகளோடு பசி பட்டினியில் தவித்து வரும் இவர்களுக்கு எந்த நிவாரணமும் அரசு வழங்குவதில்லை.
கொரோனா நோய்க்கு இரையாகிக் கிடக்கும் இவர்களை "கொரோனா வெடிகுண்டுகள்" என்று பாஜகவினர் பெயரிட்டு டிவி மற்றும் ட்விட்டர் மூலம் அவதூறு பரப்பி வந்துள்ளனர்.
தி ஒயர்.இன் 1 May 2020 தகவல் படி:
In recent times, Rohingya refugees have become highly visible due to the vicious campaign launched by the BJP and its Hindu right wing partners calling the Muslims “Corona Bomb”. This started after TV9 Bharatvarsh, a free to air TV news channel, began broadcasting a so-called investigative report...
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் திட்டமிட்டு இந்தியா முழுதும் கொரோனாவைப் பரப்பி விட்டதாக வந்த ட்வீட்கள் 3 லட்சம் தடவை வெளியாகி ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.
இதை அமெரிக்காவின் டைம் ஏடு வெளிப்படுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது மனிதவிரோதி அமித்ஷா கூறினார்:
11 April 2019 இந்தியா டுடே.இன் தகவல்:
"The illegal immigrants are like termites. They are eating the grain that should go to the poor, they are taking our jobs.
அதாவது--
"இந்த வந்தேறிகள் கரையான்கள் போன்றவர்கள். நம் நாட்டு ஏழைகளுக்கு உரிய தானியத்தைத் தின்றுவிடுகிறார்கள்,
நம் வேலைகளைப் பறித்துக் கொள்கிறார்கள்.
நாங்கள் மீண்டும் டெல்லியில் ஆட்சிக்கு வந்ததும் இவர்களைத் தூக்கியெறிவோம்."
இப்படி வெறியேற்றும் அரசியல் பலகாலமாக நடந்து வந்ததை பிபிசி நிறுவனத்தின் ஆய்வு சிறிது காலம் முன்பு கையும் களவுமாகப் பிடித்தது.
நம் மூச்சு நின்று போகும்படியான அதிர்ச்சித் தகவல் இது:
பிபிசி.காம்,தமிழ் :
"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்துக்களின் சடலத்தை சாப்பிடுகிறார்களா? உண்மை என்ன? பிபிசி ஆய்வு
பிரசாந்த் சாஹல்
உண்மை கண்டறியும் குழு, பிபிசி
25 டிசம்பர் 2018
"மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிஞ்சா முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் வைரலாக பரவுகின்றன.
'இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்' என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன.
ஹரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.............இந்த செய்தி, டிவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகுள் பிளஸ்ஸிலும் பகிரப்படுகிறது. இந்த அதிர்ச்சியான செய்திகளை வாட்ஸ்-அப் செயலிலும் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர்..........."
பிபிசி மேலும் கூறுகிறது:
"இந்த தகவலின் உண்மைத்தன்மையை
சரிபார்ப்பதற்காக பிபிசி, மேவாதில் கள ஆய்வு மேற்கொண்டது.
புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய பிபிசி மேற்கொண்ட ஆய்வில், அது போலிச் செய்தி என்று தெரிய வந்தது. மேலும், சத்பீர் பரத்வாஜ் பகிரப்பட்ட புகைப்படம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருப்பதால் அந்த புகைப்படத்தை பகிரவேண்டாம் என்று பிபிசி முடிவெடுத்தது."
அன்பர்களே, மேலே நான் அச்சுப் பிசகாமல் தந்திருக்கும் பிபிசி வாசகங்களை அவர்களின் அதிகார பூர்வ தளத்தில் சென்று எவரும் உறுதி செய்து கொள்ளலாம்.
இதுதான் மோடிமுகாம் உருவாக்கி வளர்த்துவரும் ஹிட்லர் பாணி அரசியல்.
இதன் அம்சமாகத் தான் இன்று ஹைதராபாத் நிகழ்வுகள் அமைந்துள்ளன.
வங்கத்திலும், தமிழகத்திலும் எங்கெங்கும் இனி இந்தக் கொலைபாதக அரசியலை வளர்ப்பதே அமித்ஷாக்களின் நீண்ட காலத் திட்டம் .
தமிழகத்தில் சினிமாக் கவர்ச்சியும், நடிகர் பக்தியும், போலி தமிழ்த் தேசிய வெறியும் பாஜகவின் இந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கு முற்றிலும் உகந்தவையே.
ஆழத்திற்குச் செல்லாமல் எல்லாவற்றையும் நாம் மேலோட்டமாக மேய்ந்துகொண்டே இருந்தோமானால் கடைசியில் கொத்துக் கறியாவது திண்ணம்.
பெரியார் மொழியில் சற்றே அதட்டலோடு எச்சரிக்கிறேன்.
சிந்தியுங்கள்.
அறிவும், அறமும் துணை
அன்புடன்,
மருதமுத்து
மானுட சகோதரத்துவ சங்கம்
கருத்துரையிடுக