தொழிலாளர் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
தருமபுரி, பிப்.3- தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சட்ட தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார்.ஏஐடியுசி மாவட்ட செயலாளர் பி.மணி, எல்பிஎப் மாவட்ட செயலாளர் பி.எம்.சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் மோகன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி.முருகன், எம்எம்எஸ் பேரவை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு, தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புக்களை திரும்ப பெற வேண்டும். அனைத்து நலவாரிய உறுப்பி னர்களுக்கும் மாதம் ரூ 7,500 வழங்க வேண்டும்.பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. மின்சார சட்டம் 2020 ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
கோவை
கோவை காந்திபுரத்தில் மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் காவல் துறையி னருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைய டுத்து, போராட்டத்தில் கலந்து கொண்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை தரதரவென இழுத்தும், குண்டுக்கட்டாக தூக்கியும் காவல் துறை யினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஐஎன்டியுசி தலை வர் துளசிதாஸ், ஏஐடியுசி தலைவர் ஆறு முகம், சி.தங்கவேல், எச்எம்எஸ் தலைவர் ராஜாமணி, சிஐடியு தலைவர்கள் வேலுச் சாமி, மனோகரன், எல்பிஎப் மணி, வணங்கா முடி, எம்எல்எப் தியாகராஜன், எஸ்டிடியு ரகுபுநிஸ்தார் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Credits Theekathir

கருத்துரையிடுக