அகில அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு *சம்யுக்தா கிசான் மோர்ச்சா பத்திரிகை குறிப்பு
1
======================
68 வது நாள்,
31 ஜனவரி 2021
======================
குடியரசு தின அணிவகுப்புக்குப் பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுவது குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) தனது கவலையை வெளிப்படுத்தியது.
இதுபோன்ற காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தொகுக்க இப்போது முயலுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் அதைப் பற்றிய முறையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிக்கல்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பிரேம் சிங் பாங்கு, ராஜீந்தர் சிங் தீப் சிங் வாலா, அவ்தார் சிங், கிரஞ்சித் சிங் சேகோன் மற்றும் பஜ்லீத் சிங் ஆகியோர் அடங்குவர். காணாமல் போனவர்கள் குறித்த எந்தவொரு தகவலையும் (காணாமல் போன நபரின் முழு பெயர், முழு முகவரி, நபரின் தொலைபேசி எண் மற்றும் வீட்டில் உள்ள வேறு எந்த தொடர்பு எண், போன்றவை) 8198022033 உடன் பகிர்ந்து கொள்ளும்படி SKM கேட்டுக் கொள்கிறது.
மந்தீப் புனியா போன்ற பத்திரிகையாளர்களை பொய்யான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்ததை சமியுக்த் கிசான் மோர்ச்சா கண்டனம் செய்கிறது.
அரசாங்கத்தின் உண்மையான சதித்திட்டம் அம்பலப்படுத்தப்படும் என்ற அச்சம் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் பெருகிவரும் வலிமை குறித்த பயத்தின் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது.
போராட்டம் நடக்கின்ற பல்வேறு தளங்களின் இணைய சேவைகளைத் துண்டிப்பதையும், விவசாயிகளின் போராட்டம் மீது அரசாங்கம் நடத்திய தாக்குதலையும் SKM கண்டனம் செய்கிறது.
உண்மையான தகவல்கள் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளைச் சென்று அடையவோ அல்லது அவர்களின் அமைதியான நடவடிக்கைகள் உலக மக்களைச் சென்று அடைவதையோ அரசாங்கம் விரும்பவில்லை. தவறாக திரித்துவிடும் அரசின் செய்திகள் மட்டுமே விவசாயிகளிடம் பரவ வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
பல்வேறு போராட்ட தளங்களில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த பணிகள் குறித்தும் அரசு அஞ்சுகிறது. எனவே அவற்றுக்கு இடையேயான தகவல்தொடர்பு வழிகளைத் துண்டிக்க முயற்சிக்கிறது. இது ஜனநாயக விரோதமானது மற்றும் சட்டவிரோதமானது.
சிங்கூர் எல்லையை அடைவதற்கு நீண்ட தூரத்திலிருந்து வரும் சாதாரண மக்களையும், ஊடக ஊழியர்களையும் அனுமதிக்காமல் போராட்ட தளங்களைச் சுற்றி வளைப்பது குறித்து சாமியுக்த் கிசான் மோர்ச்சா கேள்வி எழுப்பியுள்ளது. உணவு, நீர் போன்ற அடிப்படை பொருட்கள் வந்தடைவதை சீர்குலைக்கும் செயலையும் செய்கிறது.
*"அரசாங்கத்தின் இந்தப் பல்வேறு தாக்குதல்கள் அனைத்தும் எங்களுக்கு தெரியாமல் இல்லை; நாங்கள் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம்"* என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா பத்திரிகை குறிப்பு கூறுகிறது.
காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் பல வன்முறை செயல்கள் இருந்தபோதிலும், விவசாயிகள் இன்னும் மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குறைந்த பட்ச ஆதாரவிலை குறித்து விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். டெல்லி மோர்ச்சா பாதுகாப்பானது மற்றும் அமைதியானது என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இன்று ஷாஜகான்பூர் போராட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த மேலும் ஒரு போராளி இறந்த சோகமான செய்தியை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். தியாகி ஆனவர் தோழர் ஷைரா பவாராவுக்கு வெறும் 21 வயது. அவரது தியாகம் நினைவில் என்றென்றும் இருக்கும்; வீணாகாது.
நேற்று அறிவிக்கப்பட்ட சத்பவனா திவாஸ், நாடு முழுவதும் பரவலாக நடத்தப்பட்டதாகவும், மத்தியப் பிரதேசத்தில், ரேவா, மாண்ட்சூர், இந்தூர், குவாலியர், ஜாபுவா மற்றும் பிற இடங்களிலும் சத்பவனா திவாஸ் நடத்தப்பட்டதாகவும் SKM குறிப்பிடுகிறது.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அறிஞர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடித்தனர்.
ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஷாஜகான்பூர் எல்லையை வந்தடைந்து இருக்கிறார்கள். மோர்ச்சா நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் புதிய குழுக்கள் சிங்கு எல்லை மற்றும் திக்ரி எல்லையையும் அடைந்துள்ளன. அதே நேரத்தில் காசிப்பூர் எதிர்ப்புத் தளம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
டாக்டர் தர்ஷன் பால்
*சம்யுக்தா கிசான் மோர்ச்சா*
9417269294
வெளியீடு
*AIKSCC Tamilnadu
