கல்வி நிலையங்களில் 'பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கமிட்டி'யின் இலட்சணத்தை பாரீர்!!
கமிட்டியில் Student Dean திரு உசைன் பாதிக்கப்பட்ட மாணவியிடம் கேட்கிறார், 'ஒரு பாதிக்கப்பட்ட பெண் நீங்கள். ஏன் இரவு முழுவதும் ஆண் தோழர்களுடன் அமர்ந்திருக்கிறீர்கள்? இது உங்களுக்கு safe ஆ?' என்கிறார்.
முற்போக்கு பூமியான தமிழகத்தில் ஆணுக்கு பெண் சமம் எனும் கருத்தியலை தொடர்ச்சியாக பேசி வரும் இந்த சமூகத்தில் ஒரு Dean இவ்வாறு Sexual Harassment Committee யில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்கிறார். இது என்ன மாதிரியான கேள்வி? இதுக்கு என்ன மாதிரியான பதிலை அவர் எதிர்பார்க்கிறார்?
துறையின் தலைவர் தன்னிடம் படிக்கும் மாணவியிடம் அத்துமீறி இருக்கிறார். துறையில் பெண் ஆசிரியர்கள் யாருமே இல்லை. இந்த துறையில் பெண்கள் படிப்பதும் கூடத்தான் not safe என்று கூறலாம்.
இந்த கமிட்டியில் Student representative ஆக ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள். அந்தம்மா ஒரு வார்த்தை கூட மாணவர்கள் பக்கம் இருந்து பேசவும் இல்லை. ஆணாதிக்கவாதியான திருவாளர் உசைன் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இப்படி கேட்டபோதும் உடன் அமர்ந்திருந்த சக கமிட்டி பெண் பேராசிரியர்களும் இதனை எதிர்த்து கேட்கவில்லை. Student Representative மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
கல்வி நிலையங்களில் 'பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கமிட்டி'யின் இலட்சணத்தை பாரீர்!!
கமிட்டியில் Student Dean திரு உசைன் பாதிக்கப்பட்ட மாணவியிடம் கேட்கிறார், 'ஒரு பாதிக்கப்பட்ட பெண் நீங்கள். ஏன் இரவு...
Posted by Vicky Kannan on Friday, 19 March 2021

கருத்துரையிடுக