சாதியை வைத்து தப்பிக்க பார்க்கும் துறைத்தலைவர் சௌந்தரராஜன்!

 சாதியை வைத்து தப்பிக்க பார்க்கும் துறைத்தலைவர் சௌந்தரராஜன்!

மாணவர்களின் இந்த ஐந்து நாள் போராட்டம் என்பது மாணவியிடம் அவர் தகாத முறையில் நடந்துக்கொண்டார் என்பது தான். ஆனால் துறைத்தலைவர் அதுகுறித்து எவ்வித கருத்தும் சொல்லாமல் சாதியை வைத்து தப்பிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இன்று வரையிலும் துறைத்தலைவர் மாணவர்கள் மீது அளித்துள்ள புகார் என்னவென்பதை நிர்வாகமோ அந்த நிர்வாகம் இதற்கு முன் அமைத்த கமிட்டியிலோ கூட விசாரிக்கப்படவில்லை. அதனை மாணவர்களுக்கு தெரியபடுத்தவும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக 'சாதி இந்துக்களான மாணவர்கள் சிலர் சாதி ரீதியாக இவரை விமர்சித்ததாக' ஒரு தவறான தகவலை சமூக வலைதளங்களில் சுற்றலில் விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இப்படி ஒரு தகவலை தெரிவித்தார்கள் என தெரியவில்லை. இதுவரை பதிவாளரோ மற்ற நிர்வாகிகளோ கடந்த ஐந்து நாட்களில் ஒருமுறை கூட எங்களிடம் இதுகுறித்து கேட்கவோ விசாரிக்கவோ இல்லை. அதோடு போராடும் மாணவர்களில் அனைத்து சமூக மாணவர்களுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இல்லை.
ஆனால் "The New Indian Express" இதழில் இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது. அதுவும் ஒரு பல்கலைக்கழக நிர்வாகி அதனை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதுபோக கடந்த மாதம் இதே துறைத்தலைவர் மீது 'திட்டமிட்டு 8 மாணவர்களை துறைத்தலைவர் பெயில் செய்ததாக' ஒரு புகார் மாணவர்கள் சார்பாக தரப்பட்டு, அந்த 8 மாணவர்களின் விடைத்தாள்களை மூன்றாம் நபரை கொண்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் அந்த 8 மாணவர்கள் மட்டும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்ததை பதிவாளர் திரு மதிவாணன் அவர்கள் கையில் தான் வெளியிட்டார். ஆனால் திட்டமிட்டு தேர்ச்சி அடையவிடாமல் செய்தமைக்கு துறைத்தலைவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
(பி.கு. ஃபெயிலான அந்த 8 மாணவர்களில் தற்போது பாதிக்கப்பட்ட மாணவி இல்லை. அந்த மாணவி இதுவரை ஃபெயிலானதில்லை. கீழ்க்கண்ட செய்தியானது பாதிக்கப்பட்ட மாணவி, தான் பெயிலானதால் இப்படி தவறான புகார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி என்ன விசயம்னு கூட தெரியாம தான் வந்து சாதியை வச்சு கருத்து சொல்றானுங்க போல)
கீழ்க்கண்ட செய்தியின்படி,
முதலில் Internal Marks என்பது 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே. அதில் இரண்டு Sessional தேர்வுகள் (20+20) வைக்கப்பட்டு அதன் மதிப்பெண்களை தான் Internal மதிப்பெண்களாக வழங்குவார்கள். அதில் Assignment என்பது Sessional மதிப்பெண்கள் மிகவும் குறைவான நிலையில் தரப்பட நேர்ந்தால் 5 மதிப்பெண்களை Grace Marks என வழங்குவதற்கு மட்டுமே. இப்படி ஒரு Assignment marks முறையில் இதுவரை முறையாக எல்லா பருவத்திலும் Assignmentsகளை சமர்பித்த யாருக்குமே Marks தரப்பட்டதில்லை (என்னையும் சேர்த்து) என்பது கூடுதல் தகவல்.
துறைத்தலைவருக்கு போதுமான தகுதி இல்லாமை, மாணவர்களை 'டீ' வாங்க அனுப்புவது, கண்டபடி திட்டுவது, நிர்வாக திறமை இல்லாமை, தேர்வு தாள்களை கூட முறையாக திருத்த தெரியாமை, முடிவுகளை முறையாக அறிவிக்காமல் வாயால் கூறுவது, பல்கலைக்கழக விதிகளை மீறி முடிவுகள் தெரிவிக்கும் செயல், மாணவியிடம் பாலியல் சீண்டல் என அடுக்கடுக்கான புகார்களை சாதியை வைத்து திசைத் திருப்பி தப்பிக்க பார்க்கிறார். இப்படிப்பட்ட சிலர் இருப்பதே உண்மையாக பாடுபடும் பலருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி தருகிறது.


சாதியை வைத்து தப்பிக்க பார்க்கும் துறைத்தலைவர் சௌந்தரராஜன்! மாணவர்களின் இந்த ஐந்து நாள் போராட்டம் என்பது மாணவியிடம்...

Posted by Vicky Kannan on Sunday, 21 March 2021