பாராசிட்டமோல் (Paracetamol) அல்லது அசிட்டாமினோபென் (acetaminophen) மாத்திரை ஓர் அறிமுகம்


பொதுவாக நோய்கள் ஏற்பட்டாலே வீட்டில் இருந்தே அதனை சரி செய்ய ஏதேனும் வழி இருக்கிறதா  என்பதையே நாம் முதன்முதலில் யோசிப்போம். இது சில சமயங்களில் நோய்களை சரி செய்து விடும். சில சமயங்களில் நோய்களை சரி செய்யாமல் தீவிர நிலைக்கும் கொண்டு செல்லும். மேலும் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் இருந்து தேவையற்ற மருந்துகளை வாங்கியும் சாப்பிடுவார்கள். இதனால் பல்வேறு உயிர் இழப்புகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக நாம் காய்ச்சல் என்றவுடனேயே கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் மாத்திரை பாராசிட்டமோல்தான். ஆனால் இதில் இருக்கும் பலவித அபாயங்களை பற்றி தெரியாமலேயே நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம்.


பாராசிட்டமோல் எனும் மாத்திரை  பல வணிகப் பெயர்களில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது சந்தைப்படுத்தப் படுகின்றது. பிரேசில், கனடா, தென்கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பவற்றில் இது, தைலெனோல் (Tylenol) என்ற பெயரிலும், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் பாராலென் (Paralen) என்ற பெயரிலும், தாய்வான், ஆஸ்திரேலியா, கிரீஸ், மத்திய அமெரிக்கா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மலேசியா, ஹொங்கொங், ஐக்கிய இராச்சியம், இலங்கை, ருமேனியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், கெனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் பனடோல் (Panadol) என்ற பெயரிலும், இந்தியாவில் குரோசீன் என்ற பெயரிலும் விற்பனைக்கு உள்ளன. அலோபதி என சொல்லப்படும் ஆங்கில மருத்துவ முறையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அத்தியாவசிய மருந்துகளில் பாராசிட்டமோலுக்கு முதலிடம். உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்தும் இது தான்.


பாராசிட்டமோல் உரவான கதை : 1877ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை சேர்ந்த வேதியியல் விஞ்ஞானி ஹார்மன் நார்த்ரோப் மோர்ஸ் தான் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது பாராசிட்டமோலை கண்டறிந்துள்ளார். இருந்தாலும் ‘கிளினிக்கல் டிரையல்

(Clinical Trail)’ என சொல்லப்படும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதை உட்படுத்தாமல் இருந்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு(1887) மருந்து ஆராய்ச்சியாளரான ஜோசப் வோன் மெரிங் மனித உடலில் பாராசிட்டமோல் மருந்தை ஆய்வுகளுக்கு உட்படுத்தி உள்ளார். இப்படி படிப்படியாக பல ஆய்வு பணிகள் அரை நூற்றாண்டு வரை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 1949இல் பெர்னார்ட் புரூடி, ஜூலியஸ் ஆக்சிலிராட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பாராசிட்டமோலை பயன்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என்பதை நிரூபித்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டனர். அதன் பின்னர் தான் பாராசிட்டமோல் மாத்திரை சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1950இல் அமெரிக்காவில் பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்ரிக்கா என அனைத்து கண்டங்களுக்கு பாராசிட்டமோல் மருந்தின் பயன்பாடு படர்ந்துள்ளது.


பாராசிட்டமோல் : பொதுவாக வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைக்கவும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக, தலைவலி, உடல் வலி, தசை வலி, முதுகு வலி, போன்றவற்றிற்கும் இதனை பயன்படுத்தலாம் என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். அதுவும் அந்தந்த வலியின் தன்மையை பொருத்தே இதன் அளவு வேறுபடும். சிலர் தேவையற்ற பல நோய்களுக்கும் இதனை பயன்படுத்துகின்ற்னர். அவ்வாறு செய்வது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தை தரலாம். புற்றுநோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு அல்லது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் வலியை சமாளிக்க உதவும் வகையில் இது பெரும்பாலும் அளிக்கப்படுகிறது. உடல் வெப்பத்தை சராசரி அளவுக்கு கொண்டு வர பாராசிட்டமால் அதிமருந்தாக பயன்படுகிறது. இதன் தாக்கம் சராசரியாக 4-6 மணி நேரம் வரை நீடிக்கும். பாராசிட்டமாலை குறிப்பிட்ட அளவே பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் ஒரு டோஸிற்கு 1 gram (1000 mg) மற்றும் ஒரு நாளைக்கு 4 gram (4000 mg) அளவும் எடுத்து கொள்ளலாம். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றே கொடுக்க வேண்டும்.


பக்க விளைவுகள் : வாந்தி, மயக்கம், அதிக காய்ச்சல்,வாய் புண், அல்சர், குடல் பாதிப்பு, ரத்த சோகை


சாப்பிடகூடாத நபர்கள் ; உடலில் ஏதேனும் அலர்ஜி, அரிப்புகள் ஏற்பட்டிருந்தால் உபோயோகிக்க கூடாது. அத்துடன் கிட்னி மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள்,கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமாலை பயன்படுத்த கூடாது. நீரிழிவு நோயாளிகள் இதனை மருத்துவரின் ஆலோசனையோடு உட்கொள்ள வேண்டும்


மு.ரா. ராஜேஷ் 

முதுநிலை ஆசிரியர்