பிரச்சாரம் பற்றி லெனின்..

நம்முடைய பிரச்சாரம் புரட்சிகரமானது....
புரட்சிகரமான பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவது என்பது வெளிப்படையான புரட்சிப் போராட்டம் நடத்தும் நமது கடமையில் தலையாயதாகும்,


பொதுவுடைமைவாதப் பிரச்சாரம் புரட்சிகரத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய அதிமுக்கியமான விசயம், 
பெருண்மையான பிரச்சினைகளின் பரவலான பொதுவுடைமைவாதக் கண்ணோட்டமும், 
அதற்குரிய பொதுவுடைமைவாதப் போராட்ட அறைகூவல்களும் (முழக்கங்களும்) நமது சிறப்பான கவனத்தையும் அக்கறையையும் பெற வேண்டும்,
பொதுவுடைமைவாதப் பிரச்சாரங்களின் தலையாய வடிவங்கள் பின்வருமாறு,
1.தனிப்பட்ட வாய்வழிப் பிரச்சாரம்,
2.தொழிலாளர்களின் தொழிற்சங்க மற்றும் அரசியல் இயக்கத்தில் பங்கு பெறுவது,
3.கட்சிப் பத்திரிகை மற்றும் கட்சி வெளியீடுகளை விநியோகிப்பது, ஆகியவைகளின் வாயிலாக நடத்தும் பிரச்சாரம்,
சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இப்பிரச்சார வடிவங்கள் ஏதாவதொன்றில் முறையாகப் பங்கேற்க வேண்டும்..
-தோழர் லெனின்..